Product Summery
Author: Salman Khan
paperback
₹ 299
₹ 299
ஏஐ யுகத்தில் கற்கும் முறையின் எதிர்காலம் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு. சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் ஒரு சிறந்த படைப்பாகும். -பில் கேட்ஸ் "இது கல்வி குறித்து அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் ஆடம் கிராண்ட் நியூயார்க் டைம்ஸின் விற்பனையில் சாதனை படைத்த முதன்மையான நூல்களான ஹிடன் பொட்டன்ஷியல் மற்றும் திங்க் அகைன் எழுதிய ஆசிரியர், அத்துடன் ரீ திங்கிங் பாட்காஸ்டின் தொகுப்பாளர். "இந்த நூலை வாசியுங்கள் இது ஏஐ நாம் கற்றுக்கொள்ளும் விதத்தை எவ்வாறு மாற்றும் என்பதற்கான மிகவும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான பொருளடக்கமாகும்." -வால்டர் ஐசக்சன் எழுத்தாளர் இவர் எழுதிய நூல்கள் நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் நூல்களில் முதன்மையானவையாகும். நாம் விரும்புகிறோமோ இல்லையோ ஏஐயினால் கல்வி மாறி வருகிறது. தொலைநோக்கு பார்வையுடன் கான் அகாடமியை நிறுவிய சல்மான் கான் துணிச்சலான புதிய சொற்கள் என்ற இந்த நூலில் ஏஜயும் ஜிபிடி தொழில்நுட்பமும் கற்கும் முறையை எவ்வாறு மாற்றும் என்பதை ஆராய்கிறார் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் இந்த அற்புதமான (சில நேரங்களில் அச்சுறுத்தும்) புதிய உலகில் பயணிப்பதற்கு வழிகாட்டுகிறார். கல்வி தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியான கான் இந்த அதிநவீன கருவிகளின் நுணுக்கங்களையும் அவை நாம் கற்றுக்கொள்ளும் முறையையும் கற்பிக்கும் விதத்தையும் எவ்வாறு நிரந்தரமாக மாற்றும் என்பதையும் விளக்குகிறார் சாட்ஜிபிடியினால் ஏற்படும் மாற்றத்தை சிலலிடும் அச்சத்துடன் அணுகுவதற்குப் பதிலாக மாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஏஜயை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றவாறு மாற வேண்டும் (அதன் குறைபாடுகளையும் வரம்புகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும்) என்று கான் விரும்புகிறார் கல்வியில் ஏஐயை ஏற்றுக்கொள்வது என்பது மனிதர்களுக்கிடையிலான உரையாடலை தவிர்ப்பதல்ல, மாறாக அதை மேம்படுத்துவதாகும் என்று அவர் வலியுறுத்துகிறார். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் தாங்கள் ஏற்கனவே செய்து வரும் வேலையை புதிய ஆக்கப்பூர்வமான வழிகளில் சிறப்பாக செய்ய முடியும். கற்றலைத் தனிப்பயனாக்க முடியும்: தேரவு முறைகளை மாற்றியமைக்க முடியும் வகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரின் வெற்றிக்கும் உதவ முடியும், நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாகி வரும் எதிர்காலத்திற்கு மாணவர்களை தயார்படுத்த முடியம்.